தமிழகம்

வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

68views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம். வளர்ப்பு நாய்களுக்கு ஊசி மற்றும் சிகிச்சை அளித்தல் நடைபெற்றது. மதுரை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், திருமங்கலம் கால்நடை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். வாடிப்பட்டி ஒன்றிய அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக கடந்த வாரம்.அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வெறிநோய் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாமில் வெறி நோய் தடுப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மருத்துவர்கள் திருநாவுக்கரசன், பாலமுருகன், சுரேஷ், வாசுதேவன், பராமரிப்பு உதவியாளர்கள் நேரு, மணி, உட்பட மருத்துவ அலுவலர்கள் சிகிச்சைகள் செய்தனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!