தமிழகம்

தேனி மாவட்டத்தில் உள்ளவைகை அணையின் கட்டுமானப் பணிகள்

129views
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அணையான வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ளது. சிறப்பு வாய்ந்த வைகை அணையை பார்வையிட தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு அதிகப்படியான மழை பெய்த காரணத்தினால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி பத்தாயிரம் கன அடி நீர் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அப்பொழுது அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் கைப்பிடி கம்பிகள் சேதமானது.
தற்போது சேதம் அடைந்த கம்பிகள் உள்ள பகுதியில் பலம் பொருந்தியசவுக்கு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட சவுக்கு பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் உள்ளது. ஊழியர்களும் அப்பகுதியினை பார்வையிட்டு வருகின்றனர். விரைவில் சவுக்கு கம்புகள் அகற்றப்பட்டு இரும்பு கம்பிகள் போடப்பட உள்ளது என்பதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை புரிவதால் குப்பைகள் ஏற்படுவதை கருதி பூங்காக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் குப்பை கூடைகளும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!