தமிழகம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம்

72views
தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக முதல்வர் ஆணைப்படி வானவில் மன்றம் கணிதம் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்ட புதிய முயற்சியாக நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி வித்தியாச செல்லமுத்து பூஞ்சாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அறிவியல் ஆசிரியை சுமித்ரா மற்றும் உதயகுமார் கணித ஆசிரியை மங்கையர்க்கரசி ஸ்டெம் தூதுவர் அபரஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உராய்வு மற்றும் வேதியல் மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதையும் கணித பாடத்தில் எங்களை எப்படி வர்க்கமாக பிரிப்பது என்பதை சுட்டி காட்டினார்கள். நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!