தமிழகம்

உசிலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயன்னற்ற பொருட்களை சேகரிக்கும் மையத்தை திறந்து வைத்த நகர மன்ற தலைவர்

76views
தமிழகம் முழுவதும் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் பயனற்ற நிலையில் இருக்கும் பொருட்கள் ஆன நெகிழிப் பொருட்கள் பழமையான புத்தகங்கள் துணிகள் மற்றும் காலணிகளை சேகரித்து அதனை மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி மாற்றும் நோக்கத்தில் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் அமைத்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 19 ஆவது வார்டில் நகர மன்ற தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் தேன்மொழி, ஆணையாளர் பாண்டித்தாய் ஆகியோர் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி, பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் வேஸ்ட் பொருட்கள் சேகரிக்கும் மையம் திறந்து வைக்கப்பட்டது, இதில் ஏராளமான பொருட்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
இந்த ஏற்பாட்டை சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகுமார், துப்புரவு மேற்பரப்பு தனிகொடி, முத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் அருள்மொழி, பரப்புரையாளர் சக்திவேல், ஜெயப்பிரதாப், சிவரஞ்சனி, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மல்லபுரம், சுலப்புரம், ஏழுமலை, ஸ்ரீ சாய் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சௌந்தர்யா, விஐயலட்சுமி,கீர்த்திகா,இந்துமதி, சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவிகளாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாங்கப்படும் பழைய புத்தகங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் வீட்டிற்கு தேவையான உபயோகப்படும் பொருட்களாக அலங்காரப் பொருட்கள் செய்து காண்பித்தனர் இதில் ஏராளமான நகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்,
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!