தமிழகம்

உசிலம்பட்டியில் வாளால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு கரகம் எடுத்தும் வரும் விநோத திருவிழா நடைபெற்றது

168views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தினர் (செட்டியார்) வழிபடும் பழமை வாய்ந்த சௌடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்திலிருந்து கிணற்றில் புனித நீர் எடுத்து கரகம் எடுத்து சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடை பயணமாக உசிலம்பட்டி சௌடாம்பிகை கோவிலிற்கு பக்தர்கள் வருவார்கள். கரகம் எடுத்து வரும் வழியில் வாளால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு வந்தனர்.
இவ்வாறு தங்களின் உடலில் வாளால் வெட்டி தங்கள் ரத்தத்தை சிந்தி வருவதன் மூலம் எந்த ஒரு தீய சக்தியும் கரகத்தை தீண்டாமல் இருப்பதாகவும் இதுபோன்று வாளால் தங்களின் உடல்களை வெட்டிக்கொண்டு வருவதன் மூலம் நோய் நொடி இல்லாமலும் ஊர் செழிக்கும் என்பது ஒரு ஐதீகம் எனக் கூறினர்.வாளால் உடம்பில் வெட்டிய போதும் அம்மன் அருனால் காயங்கள் ஏதும் ஏற்படாது எனத் தெரிவித்தகர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறாத இந்த கோவில் திருவிழா தற்போது நடைபெற்று இருப்பதால் உசிலம்பட்டி மற்றும்; சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.முடிவில் கரகம் சௌட்ம்பிகை கோவிலை சென்றடைந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!