தமிழகம்

திமுக ஊராட்சிமன்றத்தலைவருக்கு ஆதரவாக செயல்படாத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததாக புகார். 6 வார்டு உறுப்பினர்கள் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

232views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது கோவிலாங்குளம் ஊராட்சி.இங்கு ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் ஜெயந்தி முத்துராமன்.இவர் திமுகவைச் சேர்ந்த மதுரை மாவட்ட துணைச் சேர்மன் முத்துராமனின் மனைவி ஆவார்.கோவிலாங்குளம் ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் கணவரின் துணையோடு ஊராட்சி மன்ற நிதியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இதற்கு 1, 2,3,4,9,12 ஆகிய வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவிலாங்குளம் ஊராட்சியில் இன்று சாதாரண கூட்டம் நடைபெற இருப்பதாக வார்டு எண் 1, 2,3,4,9,12 ஆகிய உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. எனவே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் உங்கள் அனைவரையும் வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கி விட்டோம் என்று கூறி வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த 6 வார்டு உறுப்பினர்களும் கோவிலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவரின் நடவடிக்கைகளை கண்டித்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!