தமிழகம்

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் குப்பைகிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

44views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும் 5 டன் அளவிலான குப்பைகளை உரமாக்கும் திட்டத்திற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உத்தப்பநாயக்கணூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக உரமாக மாற்றாமல் குப்பைகள் உரக்கிடங்கில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதாக கூறப்படுகிறது.
தினசரி குப்பைகள் எரியூட்டப்படுவதால் ஏற்படும் புகை காரணமாக பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாக குற்றம் சாட்டி உத்தப்பநாயக்கணூர் மற்றும் உ.வாடிப்பட்டி கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் குப்பைகளை கொட்டி எரியூட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதோடு , குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்து கொள்வதாக நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த கெடு முடிவடைந்த நிலையில் குப்பைகளை கொட்ட மாற்று இடமும் நகராட்சி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடந்த 4 நாட்களாக உத்தப்பநாயக்கனூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி வண்டிகளை திருப்பி அனுப்பி குப்பை கிடங்கிற்கு பூட்டுப் போட்டனர்.இந்நிலையில்; உசிலம்பட்டி நகராட்சித்தலைவர் சகுந்தலா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் குப்பை கிடங்கை பார்வையிட சென்றனர்.குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தப்பநாயக்கனூர் கிராமக்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.சம்பவமறிந்த போலிசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!