தமிழகம்

உசிலம்பட்டியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் லஞ்ச ஒழிப்புதத்துறையினரால் கைது.ரூ20ஆயிரம் பணம் பறிமுதல்.

1.56Kviews
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகில் சிவரக்கோட்டையை சேர்ந்தவர் சுப்புராஜ் 75.,இவருக்கு எழுமலை அருகே விட்டாளப்பட்டி கிராமத்தில் 3.30 ஏக்கர் நிலம் உள்ளது ,இதில் 22 சென்ட் இடத்தை தனியார் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு வாடகைக்கு வழங்கி உள்ளார். ,இங்கு மும்முனை (32 கேவி 3 பீஸ்) மின்சாரம் ட்ரான்ஸ்பாரம் அமைப்பதற்கு டி,ராமநாதபுரம் மின்வாரிய அலுவலகத்தில் சென்று பணம் செலுத்தியுள்ளார். மேலும் அங்கு தனியாக ட்ரான்ஸ்பாரம் வைப்பதற்கு உசிலம்பட்டி செயற்பொறியாளர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,இதனடிப்படையில் உத்தரவு பிறப்பதற்காக உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அழகு மணிமாறனை அணுகிய போது அவர் ரூ40ஆயிரம் லஞ்சமும் முதற்கட்டமாக ரூ20 ஆயிரம் கேட்டுள்ளார்.
இலஞ்சம் கொடுக்க கொடுக்க மனம்மில்லாத சுப்புராஜ் மதுரை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் அறிவுறுத்தலின்படி இராசயனம் தடவிய பணத்தை சுப்புராஜ் விடம் வழங்கி அனுப்பி உள்ளனர் ,இதனை சுப்புராஜ் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகு மணிமாறனிடம் லஞ்ச பணமாக வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அழகு மணிமாறன் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!