தமிழகம்

உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து கிராமமக்கள் வீடு தோறும் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

306views
தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டம் வாயிலாக தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமத்தில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து தங்;;;கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக வீடு தோறும் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை காட்டினர்.மேலும் கிராம மையப்பகுதியில்; சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!