தமிழகம்

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை.

44views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டக்கருப்பன்பட்டி- கண்ணியம் பட்டி குப்பனம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நெற்கதிர்கள் நன்று விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் ஆரியபட்டி அருகே புத்தூர் மலையிலிருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களுக்குள் சென்று நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.இதில் மலை அடிவாரப்பகுதியிலுள்ள 50க்கும் மேற்ப்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.தற்போது ஏக்கருக்கு ரூ40 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்கதிர்களை சேதப்படுத்தயால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர.; உடனடியாக தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு காட்டுப்பள்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!