உலகம்

துபாயில் பணிபுரிந்து வரும் அதியமான் கல்லூரி முன்னாள் மாணவருக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது

30views
துபாய் :
ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரி இயந்திரவியல் துறையின் முன்னாள் மாணவர் பேராசிரியர் சித்திரைபொன் செல்வன். இவர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் இலநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று உலகின் தலைசிறந்த ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழகத்தின் துபாய் வளாகத்தில் ஆராய்ச்சி துறையின் இயக்குநர் மற்றும் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இதுவரை 175-க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகளை உலகின் தலைசிறந்த இதழ்களில் வெளியிட்டு ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இவருக்கு ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழகம் ஜான் கர்டின் சிறப்பு பேராசிரியர் நாற்காலி பதவி (John Curtin Distinguished Professor) என்றை உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
சமீபத்தில் அதியமான் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அரிவுடைநம்பி நேரடியாக துபாய் வந்து கர்டின் பல்கலைக்கழகம், துபாய் பேராசிரியர் சித்திரைபொன் செல்வன் அவர்களை சந்தித்து, அதியமான் பொறியியல் கல்லூரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது, பேராசிரியர் சித்திரைபொன் செல்வன், அரிவுடைநம்பி அவரிடம் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முழு உதவி மற்றும் ஆதரவு வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!