உலகம்

ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

23views
ஷார்ஜா :
க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் 03.03.2026 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணி முதல் இரவு 1.30 மணிவரை நடைபெற்றது.

இதில் மத்திய கிழக்கில் தற்போது இருந்து வரும் பதற்றத்துக்கு மத்தியிலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 110 கொடையாளர்கள் பங்குக்கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.  இவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் க்ரீன் குளோப் உறுப்பினர்கள் ரசூல், பீர் முஹம்மது மற்றும் ரமேஷ், தேவி உள்ளிட்ட தன்னார்வலர்களும், சிறப்பு விருந்தினராக பாலா, அன்வர் மற்றும் உமா குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!