உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நடைபெற்ற அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து.

91views
அபுதாபி :
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற , பல்வேறு சமூக , சமுதாய நலப் பணிகளை செய்து வரும் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் 27 -04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவராக திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்களும்,
பொதுச் செயலாளராக இராமநாதபுரம் எம் எஸ் ஏ பரக்கத் அலி அவர்களும், பொருளாளராக லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கத்தின் தலைவர் ஹச்.எம். முகம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது மேலும் அவர்களின் பணிகள் சிறக்க நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!