உலகம்

அய்மான் சங்கமும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் நிர்வாக குழுவும் சந்திப்பு

47views
அபுதாபி :
அபுதாபியில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைமை நிர்வாக குழுவும் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாள் 29-03-2025 சனிக்கிழமை மாலை அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை அல்ஹாஜ் H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை எ சாகுல் ஹமீது ஹாஜியார், நிர்வாக செயலாளர் ஆடுதுறை MAK முஹம்மது அப்துல் காதர் மற்றும் விழா குழு செயலாளர் காயல் லப்பை தம்பி அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் ஒரு சில சமூகப் பணிகளை இணைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டன
மேலும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைவர் அல்ஹாஜ் பாவா ஹாஜி அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது உடன் பொதுச் செயலாளர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
சந்திப்பு நிகழ்வின் இறுதியாக இஸ்லாமிக் சென்டரின் பொதுச் செயலாளர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!