உலகம்

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

78views
அபுதாபி :
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் ரமலான் மாதத்தில் அய்மான் சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 18-03-2025 அன்று இப்தார் நிகழ்ச்சி அபுதாபியில் செட்டிநாடு உணவகத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள். நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். ஆரம்பமாக மௌலானா மௌலவி ஷர்புதீன் ஆலிம் அவர்களின் இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்,  பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார் அய்மான் முன்னுரை வழங்கினார்.  மார்க்கத்துறை செயலாளர் மௌலவி S. M. B ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துவக்க உரை வழங்கினார்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சென்னை அடையார் அல்ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் டாக்டர் சதீதுத்தீன் பாகவி M.A, M,Phil.அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.  மேலும் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சமூக சேவகர்கள் மற்றும் சமுதாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கம் சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், அபுதாபி லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் , காயல்பட்டினம் நல மன்றம் நிர்வாகிகள், துபாய் ஹோப் நிர்வாகிகள், அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகள், அபுதாபி மண்டல மனிதநேய ஜனநாயகப் பேரவை நிர்வாகிகள், ஸ்ரீலங்கா தூதரகத்தின் நிர்வாகிகள், அபுதாபி மவ்லூது கமிட்டி நிர்வாகிகள், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பின் அபுதாபி மண்டல நிர்வாகிகள், அபுதாபி காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகள்,அபுதாபி ஜமாத் உலமா நிர்வாகிகள் மற்றும் துபாய் & அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் மக்கள் வெகுத்திரலாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் மெளலவி A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைத் தலைவர்கள் அவை ஏ.எஸ். முகம்மது அன்சாரி, மதுக்கூர் ஒய்.எம்.அப்துல்லாஹ்,காதர் மீரான் பைஜீ, கீழக்கரை ஷேக் பரீத், ஊடகத் துறை செயலாளர் தேவிபட்டினம் ஹாஜா முபீனுதீன், மீட்புகுழு செயலாளர் கீழக்கரை முஹம்மது பாசில்,செயற்குழு உறுப்பினர்கள் கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம், அம்பகரத்தூர் முஹம்மது கைசர், நெல்லை ஹுசைன், அஜ்மல் தாகிர், கரம்பங்குடி முஹம்மது அப்பாஸ், ஆகியோர் மிக சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!