உலகம்

அல் அய்ன் அமீரக பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட தமிழக கல்வியாளர்

34views
அல் அய்ன் :
அல் அய்ன் நகரில் உள்ள ஐக்கிய அரபு பல்கலைக்கழகத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள்
முதல்வரும், கல்வித்துறை இயக்குநருமான முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் பார்வையிட்டார்.  அங்கு சென்ற தமிழக கல்வியாளரை பல்கலைக்கழக அதிகாரி டாக்டர் லயா ராஜேந்திரன் வரவேற்றார்.  அங்குள்ள வேதியியல் ஆய்வகம், நூலகம், உள் விளையாட்டரங்கம், கணிதத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு படித்து வரும் 18 ஆயிரம் மாணவர்களில் 14 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும் மருத்துவ மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் தாகிர் ரிஸ்வி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வேதியியல் துறை மற்ரும் அமீரக பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என டாக்டர் இஸ்மாயில் முகைதீன் தெரிவித்தார். அப்போது முன்னாள் மாணவர் அனீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!