உலகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி அவர்களுக்கு அய்மான் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

62views
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி நகருக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி மற்றும் பொருளாளர் எஸ். எஸ் ஷாஜஹான் அவர்களுக்கும் அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நாள்: 15- 02- 2025 சனிக்கிழமை மாலை அபுதாபி செட்டிநாடு உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நமது அய்மான் பைத்துல் மால் தலைவர் ஏ.அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் அய்மான் சங்கம் அபுதாபியில் செய்து வரும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்கள் மேலும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் செய்து வரும் சமூகப் பணிகளையும் தலைவர் டாக்டர் சேமுமு முகமது அலி அவர்கள் விளக்கினார்கள்.

இறுதியில் டாக்டர் சேமுமு முஹம்மது அலி மற்றும் பொருளாளர் எஸ். எஸ் ஷாஜஹான் அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் திருச்சியில் எதிர்வரும் மே மாதம் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் நடக்க இருக்கும் ஒன்பதாவது மாநாட்டிற்கு அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சியில் அய்மான் நிர்வாகிகள் அனைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!