உலகம்

ஷார்ஜாவில் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா

57views
ஷார்ஜா :
ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரகப் பிரிவின் சார்பில் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா நடக்கிறது.
விழாவுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகிக்கிறார்.
இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி நூலை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.
இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இஸ்லாமிய இலக்கியக் கழக பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜகான் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நூலாசிரியர் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை ஏற்புரை நிகழ்த்துகிறார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் உள்ளிட்ட குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விழா தொடர்பான விபரங்களுக்கு:  +971505196433
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!