உலகம்

இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் ஷார்ஜா மண்டலம் சார்பில் ரத்த தான முகாம்

138views
ஷார்ஜா :
இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் ஷார்ஜா மண்டலம் சார்பாக. ஃபுஜைரா ல், கல்பா, கோர்ஃபக்கான், பகுதிகளை உள்ளடக்கிய கல்பா மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஃபுஜைரா கல்பா கோர்ஃபக்கான் பகுதிக்கான இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையிலும். அமீரக இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் தலைமை நிர்வாகிகள் தலைவர் அதிரை அப்துல்ஹாதி, துணைத்தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம் துணைச்செயலாளரும் அபுதாபி மண்டல பொறுப்பாளர் அபுல்ஹசன், துணைச்செயலாளர். மற்றும் ஷார்ஜா மண்டலத்தின் பொறுப்பாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக முபாரக் அலின்கான் இறைவசனம் ஒதி விளக்கம் அளித்து துவக்கி வைத்தார். துபாய் மண்டல நிர்வாகிகள் ஷார்ஜா மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை ஃபுஜைரா கல்பா கோர்ஃபக்கான். பகுதிகளின் செயலாளர்கள் புதுவலசை சகுபர் அலி மற்றும் ஷார்ஜா மண்டல (பொறுப்பு) பொருளாளர் நெல்லிக்குப்பம் முகம்மது ரஃபி, ஆகியோர் செய்தனர்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!