உலகம்

ஷார்ஜாவில் மௌலானா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய கண்காட்சி

44views
ஷார்ஜா :
ஷார்ஜா ஹவுஸ் ஆஃப் விஸ்டம் நூலகத்தில் பாரசீக அறிஞர் மௌலானா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய கண்காட்சி நடந்து வருகிறது.  இந்த கண்காட்சியை மஸ்னவியின் காதலர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் தலைமையில் தமிழக குழுவினர் பார்வையிட்டனர்.

அப்போது அவர் பேசியதாவது : மஸ்னவி ஷரீஃப் என்ற ஈரடி வெண்பாக்களை இயற்றிய மௌலானா ஜலாலுதீன் ரூமி தொடர்பான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த ஷார்ஜா நூலகத்துக்கு நன்றி தெரிவித்தார். இந்த நூலானது தமிழில் ஏழு பாகங்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இதனை தமிழ் கூறும் நல்லுலகினர் படித்து பயன்பெற வேண்டியது அவசியம் ஆகும் என்றார். மேலும் மஸ்னவி ஷரீஃப்-ன் ஏஉழ் பாகங்களும் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இந்த கண்காட்சியை இளையான்குடி அபுதாஹிர், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், அதிரை ஷேக் தாவூது ஆலிம், இலங்கை நிசார் மௌலவி, அம்பாசமுத்திரம் ஹுசைன், காயல் யஹ்யா, திண்டுக்கல் ஹம்தான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.  வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என நூலக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!