உலகம்

ஐக்கிய அரபு அமீரகம்-அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கம்

28views
அபுதாபி:
கடந்த 14-01-2025, செவ்வாய் கிழமை அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துவக்க விழாவும் அமீரகத்திற்கு வருகை தந்துள்ள கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் அபுதாபி கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரி முன்னாள் மாணவர்களின் அறிமுகத்தை தொடர்ந்து மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். திருமறை வசனத்தை ஆடுதுறை முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் இமாம் அல்ஹாஜ் மௌலவி இ. ஷாஹுல் ஹமீது தாவூதி ஓதினார்கள். பிறகு தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
வரவேற்புரை A.S.முஹம்மது அன்சாரி அவர்கள் வழங்க, தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளருமான ஹாஜி முனைவர் A.K.காஜா நஜ்முதீன், பொருளாளர் ஹாஜி M.J. ஜமால் முஹம்மது ஆகியோர் வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரியின் வரலாறுகளையும் கல்லூரி செய்து வருகின்ற வளர்ச்சி பணிகளையும், எதிர்கால திட்டங்களையும் உள்ளடக்கி உரையாற்றினார்கள். தொடர்ந்து பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர் D.I. ஜார்ஜ் அமலரெத்தினம் அவர்கள் விரிவான முறையில் சமூகத்தில் கல்லூரியின் தாக்கத்தை பற்றியும், உலக அளவில் வெற்றி கண்டுவரும் கல்லூரியின் வளர்ச்சி குறித்தும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடுகளையும் விவரித்தார்கள். முதல்வரை தொடர்ந்து பேசிய‌ முன்னாள் மணவர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் முனைவர் M. செய்யது அலி பாதுஷா, கல்லூரியின் துணை செயலாளர் முனைவர் K.அப்துல் சமது ஆகியோர் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை பற்றி பாராட்டிப் பேசினார்கள்.
பாரம்பரியம் மிக்க இக்கல்லூரியில் படித்தவர்கள் எல்லாம் வெளி நாடுகளில் இருந்தாலும் வரலாற்றை எழுத கூடியவர்களாக இருக்கின்றனர் எனவும், கல்லூரியின் வளரச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அதிகமதிகம் இருக்கின்றது எனவும், அதன் மூலம் கல்வி பணியை சிறப்பான முறையில் செய்ய முடிகிறது எனவும் பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளருமான ஹாஜி முனைவர் A.K.காஜா நஜ்முதீன், அவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்க அபுதாபியின் கிளை திறப்பு செய்தி அறிவித்து உடன் அதன் போஸ்டரை திறந்து துவங்கி வைத்தார்கள். இந்த புதிய கிளையின் நிர்வாகிகள்: தலைவராக ஆவை A.S.முஹம்மது அன்சாரி, துணைத் தலைவராக பாபநாசம் முஹம்மது யஹ்யா, செயலாளராக மதுக்கூர் ஜஉபர் ஸாதிக்,பொருளாளாராக நாகூர் முஹம்மது முஸ்ஸம்மில் ஸாஹிப் அவர்களும் அறிவிப்பு செய்யப்பட்டார்கள்.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அபுதாபி கிளையின்
சார்பாக 75-ஆம் வருடத்தை பூர்த்தி செய்ய விருக்கும் கல்லூரிக்கும் மற்றும் ஜமால் முஹம்மது கல்லூரியின் நிர்வாகத்திற்கும் சிறப்பு நினைவு கேடயம் புதிய நிர்வாகிகளால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாபநாசம் முஹம்மது யஹ்யா நன்றி கூற ,அபுதாபி ஜமாஅத் உலமா சபையின் தலைவர் காயல் பட்டிணம் அல்ஹாபில் ஹூஸைன் மக்கி மஹ்ழரி அவர்களின் பிரார்த்தனையைத் தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

இந்த நிகச்சியில் முன்னால் மாணவர்கள் -துபை சங்கத்தின் நிர்வாகிகள், அபுதாபி மற்றும் அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள், லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் பல தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டர்.
விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை அபுதாபி சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!