உலகம்

துபாயில் டாக்டர் கி. முத்துச்செழியன் எழுதிய ‘பூமிக்குள் பூமத்திய ரேகை’ நூல் வெளியிடப்பட்டது

16views
துபாய் :
துபாய் அகாடமிக் சிட்டியில் உள்ள எஸ்.பி. ஜெய்ன் கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் தமிழக பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கி. முத்துச்செழியன் எழுதிய ‘பூமிக்குள் பூமத்திய ரேகை’ நூல் வெளியிடப்பட்டது.
துபாய் சிலிகன் ஓயசின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் கானிம் அல் பலாசி, வங்கி அதிகாரி மைதா அல் பலூசி, ஆகாஷ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமசுப்ரமணியன், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், எஸ்.பி. ஜெய்ன் கல்வி நிறுவன அதிகாரி கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் பங்கேற்று நூலை வெளியிட்டனர். நூலாசிரியர் டாக்டர் கி. முத்துச்செழியன் ஏற்புரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினர்களை எஸ். ராமசுப்ரமணியன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.  அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் நூலாசிரியருக்கு பல்கலை செம்மல் என்ற விருதை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குநர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் உள்ளிட்டோர் சுற்றுச்சூழல் தொடர்பான உரை நிகழ்த்தினர்.  மேலும் சமியுல்லா கான், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்ற விவாத அரங்கும் நடந்தது. விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், டீபா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!