உலகம்

மாலத்தீவு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரை நிகழ்த்திய துபாய் தமிழக பேராசிரியர்

15views
துபாய் :
துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவராக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் சித்திரை பொன் செல்வன் இருந்து வருகிறார்.  இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்களது பட்டத்தை நிறைவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
டாக்டர் சித்திரை பொன் செல்வன் மாலத்தீவு நாட்டில் உள்ள வில்லா கல்லூரியில் சுற்றுச்சூழல் தொடர்பான சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த சமீபத்தில் அழைக்கப்பட்டார். அங்கு சென்ற பேராசிரியருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு அவர் பருவநிலை மாறுபாடு இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விளக்க படங்களுடன் விரிவான விளக்கவுரை நிகழ்த்தினார். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க ஒவ்வொருவரது பங்கும் இன்றியமையாதது.  இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை வழங்க முடியும் என்றார்.
அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி டாக்டர் சித்திரை பொன் செல்வன் கௌரவிக்கப்பட்டார். அவரது உரை மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருந்ததாக அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!