உலகம்

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி

75views
துபாய் :
துபாய் ஜபில் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி 22.12.2024 ஞாயிறு அன்று வெகு சிறப்பாக நடந்தது.  ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் தொடக்கமாக இறைவசனம் ஓதப்பட்டது.  நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் எம். சுல்தான் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். அவர் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அனைவரும் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
பொதுச் செயலாளர் ஆர். முஹம்மது அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார்.  நிகழ்ச்சியில் ஜமாஅத்தின் பணிகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  பொருளாளர் பி. முஹம்மது அனஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ. ஜஹாங்கீர், எஸ். அமீன், ஏ.கே.எஸ். பாட்சா உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!