உலகம்

துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கடையநல்லூர் சேயன் இப்ராகிம் எழுதிய சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

562views
துபாய் :
துபாய் நகரின் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கடையநல்லூர் சேயன் இப்ராகிம் எழுதிய சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இந்த நூல்களை நூலக அலுவலர்கள் அமீரா பஹத் மற்றும் ஃபாத்திமா லூத்தா உள்ளிட்டோரிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.
மேலும் கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாற்றின் இரண்டாம் பாகம், முதல் தலைமுறை மனிதர்கள் இரண்டாம் பாகம், கவிஞர் கமாலின் எல்லாம் ஒன்றே, நபிகளாரின் ஆளுமைப் பண்பு ஆகிய நூல்களும் வழங்கப்பட்டது.  இதனை பெற்றுக்கொண்ட நூலக அலுவலர் துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு தொடர்ந்து தமிழக எழுத்தாளர்களின் நூல்களை வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்தார். இந்த நூல்களை தமிழக மக்கள் நூலகத்துக்கு வந்து எடுத்து படித்து பயன்பெற வேண்டும் என கூறினர்.  சிராஜுல் மில்லத் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி அவர் குறித்த நூல்
துபாய் நூலகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!