தமிழகம்

பேராசிரியருக்கு பாராட்டு விழா

20views
தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பவானி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த திட்ட அலுவலருக்கான விருது திட்ட அலுவலர் பவானி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்தல், இரத்ததான முகாம், தூய்மையே சேவை, மரம் நடுதல், மருத்துவ முகாம், ஏழு நாட்கள் சிறப்பு முகாம், போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி போன்ற செயல்பாடுகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. 260 திட்ட அலுவலர்களில் 12 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் இராமதாஸ் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார். தமிழ்த்துறை தலைவர் சேதுராமன், உடற்கல்வி இயக்குனர் கணேசன், உதவிப் பேராசிரியர் சிவகுமார், செல்வி , கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாணவ மாணவியர் வாழ்த்திப் பேசினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!