தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும் படைப்பும் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை

19views
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் சிறுகதை வாசிப்பும் படைப்பும் என்னும் பொருண்மையில் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை டிசம்பர் 29, 2024 முதல் ஜனவரி 03, 2025 வரை நடைபெற உள்ளது. பங்கேற்கும் மாணவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து (ISBN) நூலாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப., விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர், G.V. மார்க்கண்டேயன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் பேரா. சாக்ரட்டீஸ், தேர்வாணையர் பேரா. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் பேரா. வெளியப்பன், கல்லூரி முதல்வர் இராமதாஸ்., எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன், உதயசங்கர், நாறும்பூநாதன், மணிமாறன், லட்சுமணப்பெருமாள், முருகபூபதி, சுதாகர், பேராசிரியர்கள் காசிராஜன், அன்பரசு, ராமசாமி, ஹரிஹரன், பூமிச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
படைப்பு, வாசிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ மாணவியர் கூகுள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 60 மாணவ மாணவியருக்கு அனுமதி வழங்கப்படும். நிகழ்ச்சி நடைபெறும் 6 நாட்களும் கல்லூரியில் தங்க வேண்டும், மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். போர்வை மற்றும் விரிப்புகள் எடுத்து வர வேண்டும். மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதி உண்டு. இரவு நேரங்களில் வெளியில் செல்ல அனுமதி இல்லை. அலைபேசியைத் துறையில் ஒப்படைத்து விட்டு பயிற்சி முடிந்து செல்லும்போது திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
பயிற்சி நாட்களில் அலுவலகத்தில் வழங்கப்படும் அலைபேசி எண்ணை அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 97914 44102 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பங்கேற்பு பதிவு படிவத்தை (google form) பெறலாம். பதிவு செய்ய கடைசி நாள் 25.12.2004. பயிற்சிப் பட்டறைக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பவானி செய்து வருகின்றனர்.
முதல்வர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!