தமிழகம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

26views
குமரி மாவட்டம் தாழக்குடியில் சிறப்பாக வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சிவகுமார், தோவாளை நீர்ப்பாசன தலைவர் காந்தி, பொறியாளர் சுந்தர், பணி நிறைவு ஆசிரியர் மாணிக்கவாசகம், வார்டு உறுப்பினர் ஐயப்பன் ,ஏ .பி. கணேஷ் ஆகியோர் மேடையை அலங்கரித்து சுதந்திரப் போராட்டத்தில் வ. உ..சி. யின் பங்கை பற்றி கூறினார்கள்.
சமூக சேவகர்- பசுமை நாயகன் மருத்துவர்.தி.கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ( முழு ஊரடங்கு நேரத்திலும் இப்பகுதியில் திருமதி.தானம்மாள் வேண்டுதலுக்கு இணங்க நிவாரண பணி செய்தவர்) முதல் முதலில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள் மற்றும் நிர்வாகிகளோடு இணைந்து வ. உ.சி . திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் பாராட்டி குறிப்பாக சுதந்திரப் போராட்டத்தில் முன்னோடியாக திகழ்ந்த வேலுநாச்சியார் ,ஜான்சி ராணி லட்சுமி பாய் , கிற்றூர் சென்னம்மா ஆகியோர்களின் சிறப்புகளை கூறி எழுத்து உரிமை, பேச்சுரிமை அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட போதிலும் நம் தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் என்ற கொள்கை பிடிப்போடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பலொட்டி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று செக்கு இழுத்து அனைத்து துன்பங்களையும் இன்னல்களையும் தனக்கு சொந்தமாக்கியவர் வ. உ. சி. நல்ல தியாகிகளின் தியாகங்களால் பெற்றெடுக்கப்பட்ட நம் நாட்டின் சுதந்திரத்தை பேணிக்காப்பது குடிமக்களின் கடமையாகும். வ. உ. சி யின் பிறந்தநாள் விழாவை அகில இந்திய வ..உ..சி பேரவை தாழக்குடி தலைவர் வழக்கறிஞர். எம்.சபரீஷ் மற்றும் நிர்வாகிகள் ஊர் மக்களோடு இணைந்து செய்திருந்தனர் .

விழா முடிவில் போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகள் அனைவரும் பரிசு பொருட்களோடு மகிழ்ச்சியாக செல்வதை காண முடிந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!