தமிழகம்

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

97views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி என்பவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உளவுத்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் சிவா உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது பூதவுடலானது ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலஉரப்பனூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. அங்கு அவருடன் பணிபுரிந்த கிராம மக்கள் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து., திருமங்கலம் காவல் துணைகண்காணிப்பாளர் வசந்தகுமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பணியின் போது உயிரிழந்த மதுரையை சேர்ந்த திருச்சி மாவட்டத்தில் உளவுத்துறை காவல் ஆய்வாளராக பணியாற்றிய சிவாவிற்கு அவர்களது ஊர் வழக்கப்படி எரியூட்டும் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீனி தலைமையிலான போலீசார் தமிழக காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது மகன்கள் அவருக்கு கொல்லி வைத்து இறுதி மரியாதை செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!