தமிழகம்

திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றம்

79views
திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான தரைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இருப்பதாக கூறி இந்த பகுதியில் உள்ள 50 -க்கும் மேற்பட்ட கடைகளுக்கு திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய குட்ஷெட் ரோட்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஆனால் நாங்கள் அந்த இடத்திற்கு செல்ல மாட்டோம் . ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய கட்டிடம் இருந்த இடத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மெயின் கார்டு கேட் நுழைவாயில் பகுதியில் உள்ள 50 கடைகளை அகற்ற இன்று மாநகராட்சி சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர்.ஆனால் நாங்கள் பழைய குட்ஷெட் ரோட்டிற்கு செல்ல மாட்டோம். நாங்கள் கேட்கிற இடம் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டனர் பட்டியல். பின்னர் திடீர் போராட்டத்திலும்இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய தரைக்கடை வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

Right Click & View Source is disabled.

error: Content is protected !!