தமிழகம்

தமிழ்­நாட்­டில் அர­சின் சேவை­கள் பொது­மக்­களை விரை­வா­க­வும், எளி­தா­க­வும் சென்று சேர்ந்­திட வழி­வ­குக்­கும்“மக்­க­ளு­டன் முதல்­வர்”எனும் கழக அரசின் மகத்தான திட்டத்தில் மதுரை மாநகரில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்றார்

64views
தமிழ்­நாட்­டில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வகுத்­துத் தந்த சமூக நீதிப் பாதை­யில், ஏழை­யெ­ளிய, நடுத்­தர மக்­கள், விவ­சா­யி­கள், மாண­வர்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பயன்­பெ­றும் வகை­யில், பல்­வேறு சிறப்­பான திட்­டங்­க­ளைத் தீட்டி, இந்­தி­யத் துணைக் கண்­டமே போற்­றும் வகை­யில் செயல்­பட்டு வரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், அர­சின் சேவை­கள் பொது­மக்­க­ளுக்கு எளி­தா­க­வும், விரை­வா­க­வும் கிடைத்­திட பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றார்­கள்.
‘முதல்வரின் முகவரித் துறை’
அந்­த­வ­கை­யில், தாம் ஆட்­சிப் பொறு­பேற்­ற­வு­டன், தமது தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது பெறப்­பட்ட மனுக்­க­ளின் மீது தீர்வு காண, “உங்­கள் தொகு­தி­யில் முத­ல­மைச்­சர்” என்ற துறையை உரு­வாக்கி, அனைத்து மனுக்­க­ளுக்­கும் 100 நாட்­க­ளில் தீர்வு கண்டு வர­லாற்றுச் சாதனை படைத்­தார்­கள். அதன் தொடர்ச்­சி­யாக, பொது­மக்­க­ளின் கோரிக்­கை­க­ளைத் திறம்­படக் கையாண்டு, அவற்றை நிறை­வேற்­றிட ஏது­வாக, “முதல்­வ­ரின் முக­வ­ரித் துறை” என்ற தனித்­து­றையை உரு­வாக்க ஆணை­யிட்­டார்­கள். இதன்­மூ­லம் கடந்த இரண்­டரை ஆண்­டு­க­ளில் சுமார் 49 இலட்­சம் மனுக்­கள் பெறப்­பட்டு, அவற்­றிற்கு உரிய முறை­யில் தீர்வு காணப்­பட்டு வரு­கி­றது.
‘கள ஆய்வில் முதலமைச்சர்’
அதோடு, முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள், நேர­டி­யாக மாவட்­டங்­க­ளுக்கு ஆய்­வுப் பய­ணம் மேற்­கொண்டு, “கள ஆய்­வில் முத­ல­மைச்­சர்” என்ற முன்­னெ­டுப்­பின் கீழ், மாவட்­டங்­க­ளில் ஆய்­வுக் கூட்­டங்­கள் நடத்தி, கள ஆய்­வு­கள் மேற்­கொண்டு, அர­சின் நலத்­திட்­டங்­கள் மற்­றும் சேவை­கள் குறிப்­பிட்ட காலத்­திற்­குள் பொது மக்­க­ளுக்­குக் கிடைப்­பதை உறுதி செய்­திட நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­கி­றார்­கள்.
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் இந்த முன்­னெ­டுப்­பின் நீட்­சி­யாக, அர­சுத் துறை­களை அன்­றா­டம் அணு­கும் பொது­மக்­க­ளுக்கு, அரசு அலு­வ­லர்­கள் வழங்­கும் சேவை­களை மேலும் செம்­மைப்­ப­டுத்தி, அர­சின் சேவை­கள் விரை­வா­க­வும் எளி­தா­க­வும் அவர்­க­ளைச் சென்­று­சே­ரும் வகை­யி­லும், நிர்­வா­கத்­தில் வெளிப்­ப­டைத் தன்­மையை ஏற்­ப­டுத்­தி­ட­வும், திரா­விட மாடல் ஆட்­சி­யின் மற்­று­மொரு மைல்­கல்­லாக “மக்­க­ளு­டன் முதல்­வர்” என்ற புதிய திட்­டத்தை, முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ள் (18–12–2023) கோயம்­புத்­தூ­ரில் தொடங்கி வைத்தார்.மதுரையில் இந்த திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்றார்.

அனைத்­துத் துறை­கள் சார்­பில் சிறப்பு முகாம்­கள்!
“மக்­க­ளு­டன் முதல்­வர்” என்ற இத்­திட்­டத்­தில், பொது­மக்­கள் அதி­க­மாக அணு­கும் வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை, நக­ராட்சி நிர்­வா­கத் துறை, ஊரக வளர்ச்­சித் துறை, ஆதி­தி­ரா­வி­டர் நலத்­துறை, பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலத்­துறை, சமூக நலத்­துறை, மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நலத்­துறை, கூட்­டு­ற­வுத்­துறை, மக­ளிர் மேம்­பாட்டுக் கழ­கம், வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்சித் துறை, எரி­சக்தித் துறை, தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத் துறை, சிறு, குறு, நடுத்­த­ரத் தொழில்­கள் போன்ற அர­சுத் துறை­கள் சார்ந்த கோரிக்­கை­க­ளைப் பெறு­வ­தற்கு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் நேர­டிக் கண்­கா­ணிப்­பில், அனைத்து நகர்ப்­புற, மற்­றும் கிரா­மப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் வார்டு மற்­றும் கிராம ஊராட்சி அள­வில், அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் சிறப்பு முகாம்­கள் நடத்­திட உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.
• முதற்­கட்­ட­மாக இன்று (18–12–2023 முதல் 06–01–2024 வரை அனைத்து மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­கள், பேரூ­ராட்­சி­கள் மற்­றும் நக­ரப்­பு­றங்­களை ஒட்­டி­யுள்ள கிராம ஊராட்­சி­க­ளி­லும் 1745 முகாம்­கள் நடத்­தப்­ப­டும். இந்த முகாம்­கள் புய­லால் பாதிக்­கப்­பட்ட 4 மாவட்­டங்­கள் நீங்­க­லாக, ஏனைய மாவட்­டங்­க­ளில் நடத்­தப்­ப­டும்.
• சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மற்­றும் திரு­வள்­ளூர் மாவட்­டங்­க­ளில் புயல் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் நிவா­ர­ணப் பணி­கள் முடி­வுற்­ற­வு­டன், 2024 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் வாரத்­தி­லி­ருந்து 31–1–2024 வரை “மக்­க­ளு­டன் முதல்­வர்” திட்­டத்­திற்­ கான சிறப்பு முகாம்­கள் நடத்­தப்­ப­டும்.
• முதற்­கட்­ட­மாக, நகர்ப்­பு­றங்­க­ளில் நடத்­தப்­ப­டும் முகாம்­கள் முடி­வுற்ற பின்­னர், அடுத்த கட்­ட­மாக, அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் உள்ள ஊர­கப் பகு­தி­க­ளில் இந்தமுகாம்­கள் நடத்த ஆவன செய்­யப்­ப­டும்.
30 தினங்­க­ளுக்­குள் மனுக்­கள் பரி­சீ­லனை!
• இந்த முகாம்­க­ளில் சம்­பந்­தப்­பட்ட துறை அலு­வ­லர்­கள் அனை­வ­ரும் ஒரே குடை­யின்­கீழ் மக்­க­ளின் கோரிக்­கை­க­ளைப் பெற்று பதிவு செய்­வார்­கள். முகாம்­க­ளில் பெறப்­ப­டும் மனுக்­கள் அனைத்­தும், சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளால் 30 தினங்­க­ளுக்­குள் உரிய முறை­யில் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு, தகு­தி­யின் அடிப்­ப­டை­யில் உரிய சேவை­கள் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்.
• முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், கோயம்­புத்­தூ­ரில் இத்­திட்­டத்­தினைத் துவக்கி வைக்­கும் அதே நேரத்­தில், அமைச்­சர் பெரு­மக்­கள் அவர்­க­ளு­டைய மாவட்­டங்­க­ளி­லும், பொறுப்பு அமைச்­சர்­கள் அவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட மாவட்­டங்­க­ளி­லும் இம்­மு­காம்­களைத் தொடங்கி வைக்கிறார்கள். இம்­மு­காம்­க­ளில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்­டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
பொது­மக்­கள் இம்­மு­காம்­களை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்தி உரிய சேவை­க­ளைப் பெற்­றுக்­கொள்ளுமாறும் – துறை அலு­வ­லர்­கள் கோரிக்­கை­களை அக்­க­றை­யோடு பரி­சீ­லித்து அவர்­க­ளுக்கு சட்­டப்­பூர்­வ­மாகக் கிடைக்­க­ வேண்­டிய உத­வி­களை எவ்­வித தாம­த­மும் இன்றி, விரை­வா­க­வும் எளி­தா­க­வும் உரிய முறை­யில் தீர்வு காணவும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆணை­யிட்­டுள்­ளார்.
மதுரை மாநகரில் ஆரப்பாளையம் தனியார் திருமண மணடபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வார்டு எண் 57 க்கு உட்பட்ட பகுதி பொதுமக்களிடம் மனுக்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெற்றார்.இந்த நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்,மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன்,உதவி ஆணையாளர் சுரேஷ் குமார் மற்றும் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச்செல்வம், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இன்றைய சிறப்பு முகாம் பொறுப்பாளர் திருமதி.கனி மற்றும் பலர் பங்கேற்றனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக முகாமில் அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மனு பெறும் இடங்களுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பொறுப்பு அலுவலர்களிடம் கலந்துரையாடினார்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!