தமிழகம்

“உணவு பஞ்சம் அபாயம்!!! உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! விவசாயிகளை காப்பாற்றிட முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்!! – தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் கோரிக்கை

88views
அமெரிக்கா ஈரான் உலகளாவிய போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால், இதை காரணமாக பயன்படுத்தி மத்திய அரசு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை உயர்த்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தற்போது 50 கிலோ பாக்டம்பாஷ் 20:20: 400 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு ரூ.2150-க்கு விற்கப்படுகிறது. பொட்டாஷ் 1975 ரூபாயிலிருந்து 275 ரூபாய் உயர்த்தப்பட்டு 2150 ரூபாயாகவும், காம்ப்ளக்ஸ் 10:26:26 2200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் உயர்த்தப்பட்டு 2450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்மோனியா சல்பேட் 1200லிருந்து 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 1400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆனால் இந்த விலை உயர்வை சமாளிப்பதற்கான விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் வருமானம் எவ்வித உயர்வும் இல்லாமல் கீழ்நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசு அறிவிக்கிற குறைந்தபட்ச ஆதார விலையும் கரும்பு, நெல், கோதுமை, பருத்தி ஆகியவற்றைத் தவிர மற்ற பயிர்களுக்கு கொள்முதல் உரிய வகையில் இல்லாததால் ஆதார விலையும் விவசாயிகளுக்கு பயனளிப்பதாக கிடைப்பது இல்லை.
அறிவிக்கபடும் குறைந்தபட்ச ஆதார விலையும் தற்போதைய வேளாண் பயிற்று செலவுகளுக்கு தகுந்தவாறு உயர்த்தப்படாததால் ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் உர விலையால் மீண்டும் கடனாளியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
உரங்களின் விலையை உயர்த்துவதற்கு பதிலாக, மத்திய அரசு தனது சொந்த நிதியிலிருந்து உரம் மானியத்தின் தொகையை அதிகரித்து ஈடு கட்டுவது கடந்த காலங்களில் மத்திய அரசின் வழக்கமாக இருக்கும்போது, தற்போது மத்திய அரசின் சுமையை விவசாயிகள் மீது சுமத்தி இருப்பது விவசாயிகளுக்கு மேலும் இழப்பையே ஏற்படுத்தும்.
உரங்களின் விலை மேலும் உயர்த்தப்பட கூடும் எனும் செய்திகளை கண்டு விவசாயிகள் வருகிற பயிர் பருவத்தில் பயிர் செய்ய முடியாத நிலையிலும் விவசாயமே செய்வதா வேண்டாமா என்ற பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.
கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களில் கூட மத்திய அரசு உரங்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்பதும் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு நிறுத்தவிட்டால் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படும் உணவு பொருட்களின் உற்பத்தி செலவுகள் பல மடங்கு கூடுதலாகும்.  உணவு உற்பத்தி குறைந்தால் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது இதுபோல் நிலை நீடித்தால் உரம் விலை ஏற்றப்பட்டால் அது ஒரு போகமாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது விவசாயிகளுக்கு ஆதாயம் இல்லை என்றால் விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்படும்.
ஆகவே மோடியின் மத்திய அரசு உரம் விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசும் இனியும் தாமதிக்காமல் உடனடியாக இதில் தலையிட்டு, உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக, உரம் மானியத்தை அதிகப்படுத்தி நம் விவசாயிகளை கடன் சுமையில் தள்ளாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் காத்திட வேண்டுமென மத்திய மோடி அரசை வலியுறுத்துவத்துடன் இந்த உயிர்நாடி பிரச்சனையில் தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களும் விவசாயிகளை காத்திட தகுந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கேட்டுக்கொள்கிறோன்.
இப்படிக்கு
வசிகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
23/05/2026

Right Click & View Source is disabled.

error: Content is protected !!