தமிழகம்

அயலகத் தமிழர் தினம் 2024 துவக்க விழாவில் ‘மக்கள் மனம் கவர்ந்த முதல்வர்’ புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு அறிமுகம்

116views
அயலகத் தமிழர் தினம் 2024 துவக்க விழா சென்னை வர்த்தக மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சி அரங்கினைத் திறந்து வைத்து, கலைஞர் 100 அரங்கில், அயலகத் தமிழர்களால் வெளியிடப்பட்ட 50 புத்தகங்களில் ஒன்றான கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை வெளியிட்ட ‘மக்கள் மனம் கவர்ந்த முதல்வர்’ (இரண்டாம் பதிப்பு, ஜனவரி 2024) புத்தகத்தை வெளியிட்டார்.
இவ்விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர்,வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
புத்தகப் படைப்பாளர்கள் நிறைவு விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தானால் கெளரவிக்கப்பட்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!