தமிழகம்

கோயம்பேடு – விமான நிலையம் நேரடி மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

277views
முனைவர் என்.பத்ரி
சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தத் தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி நீல வழித்தடம் வழியாக விமான நிலையத்திற்கு பயணிக்க மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில்ற்கு வந்து அங்கிருந்து ஆலந்தூர் வந்து அங்கு ரயில் மாறி விமான நிலையத்திற்கு செல்ல பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!