தமிழகம்

சித்தையன்கோட்டை மதரஸா மதீனத்துல் உலூம் மதரஸா 15 ஆம் ஆண்டு விழா

91views
சித்தையன்கோட்டை :
சித்தையன் கோட்டை மதரஸா மதீனதுல் உலூம் ஹிப்ழு,நிஸ்வான் மற்றும் மக்தப் மதரஸாவின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட அரசு ஹாஜியும் திண்டுக்கல் யூசுபிஃய்யா அரபிக் கல்லூரியின் முதல்வரும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருமான மௌலானா மௌலவி P M முஹம்மது அலி அன்வாரி ஹஜ்ரத் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி துஆ செய்தார்கள்

இவ்விழாவில் நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் மற்றும் ஆலிம் பெருமக்கள் ஜமாத் தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மௌலவி அப்துல் ஜலீல் ஹஜ்ரத் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!