தமிழகம்

மதுரை.சோழவந்தான்எம்.வி.எம் திரையரங்கில்.அஜித் நடித்த துணிவு திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு கேக் வெட்டியும் பைக் ரேஸ் ஓட்டியும் ரசிகர்கள் கொண்டாட்டம்

195views
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்விஎம் மருது மாடர்ன் தியேட்டரில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வருகின்ற தை பொங்கல் அன்று திரையிடப்பட உள்ளது.  திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.
டிரைலர் வெளியீடு சோழவந்தானில் உள்ள மருது திரையரங்கின்.ராட்சத திரையில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது இதனை ஒட்டி அங்கு குவிந்த ஏராளமான அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் ட்ரம்ஸ் வாசித்தும் கேக் வெட்டியும் பைக் ரேஸ் நடத்தியும் கொண்டாடினர் . திரையரங்கு உரிமையாளரும் கல்வி தந்தையுமான எம் வி எம் மருதுபாண்டியன் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்.
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று ட்ரெய்லர் வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக அங்கிருந்த ரசிகர்கள் கூறினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிகுந்த ஆரவாரத்துடன் திரையரங்கு முன்பு குவிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!