தமிழகம்

சென்னை – கோயமுத்தூர் கோவை விரைவு ரெயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றத்திற்கு ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்த AIVF தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரி

53views
திருவள்ளுவர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சென்னையிலிருந்து கோயம்பத்தூர் செல்லும் கோவை விரைவு ரெயில் 16-ம் தேதி திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு நடைமேடை எண்: 2 – ல் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இம்மாதம் 1-ம் தேதி முதல் இந்த ரெயில் கோவையிலிருந்து சென்னை வரும்போது இரவு 10 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றுகொண்டு இருக்கும் நிலையில் இன்று திங்கள் முதல் சென்னையிலிருந்து வரும்போது திருவள்ளுரில் நின்று சென்றது.
இதற்கு அகில இந்திய விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் AIVF மணவாளன் நகரை சேர்ந்த சின்னய்ய ஜெகதீசன் ஆச்சாரி, ரயில்வே அமைச்சர் வைஷ்ணவி குமார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மணவாளன் நகர் குடியிருப்போர் சங்கம், மற்றும் திருவள்ளுர் ரயில் பயணிகள் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்து உள்ளார். அதேப்போல் இம்மாதம் (மார்ச்) 1ம் தேதி முதல் சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் விரைவு ரயிலும் நின்று சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!