தமிழகம்

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு சங்கம விழா

223views
வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு சங்கம விழா திருநெல்வேலியில் 30.04.2023 அன்று நடைபெற்றது.

இந்த சங்கம விழாவிற்கு அதன் தலைவர் வண்ணாரப்பேட்டை திரு.ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் வானரமுட்டி திரு. நம்பிராஜ், பொருளாளர் பசுவந்தனை திரு.மாடசாமி, துணைத் தலைவர் குப்புக்குறிச்சி திரு .சுந்தர், செயற்குழு உறுப்பினர் ஆழ்வார்குறிச்சி திரு.பரமசிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைவர் திரு.முருகேசன் , நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.கே.திருமலை நம்பி, நெல்லை வ.உ.சி மணிமண்டப நூலக வாசகர் வட்டத் தலைவர் திரு.உக்கிரன்கோட்டை மணி, திருநெல்வேலி லயன் சங்க மாவட்ட தலைவர் திரு.S.V ஜானகிராம் அந்தோணி, கலை பதிப்பகம் பதிப்பாசிரியர், கவிஞர், பாப்பாக்குடி இரா.செல்வமணி, பசிப்போக்கும் தளம் பொதிகை டிரஸ்ட், இலஞ்சி திரு.எம் மாரியப்பன் (சார்பதிவாளர்), தமிழ் எக்கோஸ் இணைய வானொலி நிர்வாக இயக்குனர் திரு.மு.வெ.ரா, மகிழ்ச்சி fm திரு.அமீர்கான், நெல்லை சூரியன் பண்பலையின் முன்னாள் அறிவிப்பாளர் திரு.செபாஸ்டின், நெல்லை அகில இந்திய வானொலி முன்னாள் அறிவிப்பாளர் திரு.கவிபாண்டியன், கோடைப் பண்பலை வானொலியில் அறிவிப்பாளர் திரு.ரங்கநாதன், கங்கா இணையதள வானொலி நிர்வாக இயக்குனர் திரு.குற்றாலம், சென்னை நான்fm, நான் மீடியா நிர்வாக இயக்குனர் திரு.நாகா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த சங்கம விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வானொலி நேயர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் சார்பில் செய்யப்பட்ட பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளில் பங்கேற்ற வானொலி நேயர்கள் பலருக்கும் “சிறந்த மனிதநேயர்” மற்றும் “சிறந்த சமூக சேவகர்” விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

வானொலி நேயர்கள் திரளாக கலந்து கொண்ட இந்த சங்கம விழாவில் அகில இந்திய வானொலியின் நெல்லை பண்பலை மற்றும் கோடைப் பண்பலை வானொலிகள் நேயர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினர்.

சங்கம விழா நிகழ்வுகளை அதன் நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!