தமிழகம்

திருமங்கலம் சார் பதிவு அலுவலகத்தில் காலியிடம், கட்டிடங்களுக்கு சொத்து பத்திரம் பதிவு செய்ய நிபந்தனைகள் – நகராட்சியில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே , பத்திரப்பதிவு செய்யப்படும் என அறிவிப்பு – திருமங்கலம் நகர் மக்கள் வேதனை.

144views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த ஒரு மாத காலமாக நகராட்சி ஆணையாளர் அனுப்பப்பட்ட அறிக்கையின் படி,  திருமங்கலம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காலி இடம் , கட்டிடங்களுக்கு சொத்து பத்திரம் பதிவு செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் குழாய் வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்தியதற்கான தடையில்லா சான்று பெற்ற பின்னரே, பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டுமென திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தால் அறிவுறுத்தல் செய்யப்பட்டதன் படி ,  திருமங்கலம் சார்பு பதிவு அலுவலகத்தில், நடைமுறைப்படுத்தப்பட்டதால், இதற்கு திருமங்கலம் நகர்வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து , கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் எங்குமே இல்லாத இந்த நடைமுறையை திருமங்கலம் சார்பதிவு அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், திருமங்கலம் நகர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!