தமிழகம்

ஆதரவின்றி இறந்தவரை நல்லடக்கம் செய்த தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்; கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குடும்பத்தினர்கள்

94views
தென்காசி பகுதியில் ஆதரவின்றி இறந்தவரை அனைத்து மத வழக்கப்படி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இதனை அறிந்து கொண்ட அவரின் குடும்பத்தினர்கள் பசியில்லா தமிழகம் குழுவினரின் சேவையை பாராட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி ஒரு நபர் இறந்து கிடப்பதாக தென்காசி காவல் துறைக்கு பொதுமக்கள் மூலமாக தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி காவல் துறையினர் பசியில்லா தமிழகம் மூலம் அவரது உடலை மீட்டு அவரது அடையாளங்களை சேகரித்து, அவரது குடும்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவரிடம் எந்தவித அடையாள அட்டையோ தொலைபேசியோ இல்லாததால் அவரது குடும்பத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியில் அவரது உடலை தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்கள் மூலம் அனைத்து மத வழிபாடுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தை பசியில்லா தமிழகம் அமைப்பினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
சமூக வலைதள நண்பர்கள் உதவியால் இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு அவரது குடும்பத்தை சென்றடைய வாய்ப்பாக அமைந்தது. இறந்து போன நபரின் உறவினர் மூலமாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் உடனடியாக பசியில்லா தமிழகம் அமைப்பை தொடர்பு கொண்டு தென்காசிக்கு விரைந்தனர். தென்காசியில் அவர்களை அழைத்துக் தென்காசி காவல் நிலையம் சென்று அவருக்கான அனைத்து அடையாள அட்டைகளையும் காவல் துறையிடம் ஒப்படைத்து, அவரது குடும்பத்தினர் அடையாள அட்டையையும் காண்பித்து அவரது உடலை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்களது இந்து முறைப்படி அனைத்து இறுதி காரியங்களையும் செய்தனர்.

ஆதரவின்றி இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் மாலை மரியாதையுடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்த பசியில்லா தமிழகம் நிறுவனர் ஜமீமா ஜின்னா அவர்களின் கரம் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினர். இஸ்லாமிய பெண்மணியாக இருந்தும் ஆதரவின்றி இறந்த தனது கணவனை மகளுக்கு மகளாக இருந்து நல்லடக்கம் செய்த ஜமீமா ஜின்னா அவர்களுக்கு சிவகங்கையில் இருந்து வருகை தந்த அவரது குடும்பத்தினர்கள் கட்டிப்பிடித்து இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.

ஆதரவின்றி இறந்த அவரது கணவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், தகவல் அறிந்து தென்காசிக்கு வருகை தந்த அவர்கள் குடும்பத்தை பசியில்லா தமிழகம் வாகனத்தில் அழைத்துச் சென்று காவல் துறையில் உரிய ஆவணங்களை சரிபார்த்து அன்றைய ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் கூடவே இருந்து அனைத்து பணிகளையும் முடித்து அவர்களை பேருந்து நிலையத்தில் சென்று வழி அனுப்பும் வரை கூடவே இருந்து அனைத்து பணிகளையும் செய்த பசியில்லா தமிழகம் நிறுவனர் ஜமீமா ஜின்னா அவர்களுக்கு சிவகங்கையில் இருந்து வருகை புரிந்த அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறி விடைபெற்றுச் சென்றனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!