தமிழகம்

கேன்வாஸ் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

31views
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் “உலக அமைதியில் குழந்தைகளின் பங்கு” (Childrens Role in World Peace ) என்ற தலைப்பில் குழந்தைகள் இல்லங்களில் தங்கி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளிடையே கேன்வாஸ் ஓவியப் போட்டி (Canvas Painting) மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகில் வைத்து 12.05.2023 அன்று நடத்தப்பட்டது. அதில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற ராமன், மரிய செல்வி, நாஞ்சில் பவானி ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இப்போட்டியில் பங்கேற்ற மற்ற குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற குழந்தைகள் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் மாநில அளவில் நடத்தப்பட உள்ள கேன்வாஸ் ஓவியப் போட்டியில் (Canvas Painting) கலந்து கொள்ள உள்ளனர். பரிசுகள் வழங்கிய போது தென்காசி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் க. அருள் செல்வி, பாதுகாப்பு அலுவலர் ஹ. கவிதா, இல்ல நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!