தமிழகம்

தென்காசி அருகே துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

80views
தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பில் தென்காசி அருகே உள்ள மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் கோடை கால துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கிட மாணவ மாணவியர் இப்பயிற்சியினை சிறப்பாக மேற்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக திகழ வேண்டும் என வாழ்த்தினார். பின்னர் மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியினை பார்வையிட்டு மாணவர்களை உற்சாகப் படுத்தினார்.
முன்னதாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடும் பயிற்சியின் போது துப்பாக்கி கையாளுதல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு விதிகள், வார்ம் அப், யோகா, மெடிடேஷன் ஆகியவை அளிக்கப்படுகின்றன. துப்பாக்கி சுடும் பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு உடல் நலம், மன ஒருமைப்பாடு, சிந்தனை திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, விடாமுயற்சி, பார்வை திறன் மற்றும் படிப்பில் மனது ஒருமைப்பாடு ஆகியவை சிறப்பாக அமையும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், பெற்றோர்கள் மற்றும் சக்தி மணிகண்டன், கார்த்திகேயன், டேலிஸ் மைதீன், பிச்சையா, சசி, செந்தமிழ்ச் செல்வன் மற்றும் கிளப்பின் உறுப்பினர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை கிளப்பின் செயலாளர் ஜே.ரஷீத் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!