தமிழகம்

பாவூர்சத்திரத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி; தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் கோரிக்கை

71views
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் சென்னையில் கல்லூரி கல்வி இயக்குனரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதை சுற்றிலும் 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேல் நிலைக் கல்வியை முடித்து ஆண்டு தோறும் இவர்கள் தங்கள் கலை மற்றும் அறிவியல் படிப்பை தொடர்வதற்கு தொலை தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதிமானோர் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்காமல் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். மேலும் அதிக தூரம் சென்று படிக்க போதுமான பொருளாதார வசதியும், விடுதிகளில் தங்கி படிக்கவும் முடியாத நிலையிலும் உள்ளனர்.
எனவே பாவூர்சத்திரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து கொடுத்தால் அது பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர் மாணவிகள் கல்லூரி படிப்பை பயில உதவியாக இருக்கும். எனவே பாவூர்சத்திரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராம. உதயசூரியன் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கை மனுவினை சென்னையில் கல்லூரி கல்வி இயக்குனர் கோ.கீதா வை நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் வழங்கினார். அப்போது த.லாரன்ஸ், ஜெ.சுயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!