தமிழகம்

பத்திரிகை ஊடகங்களில் தவறான செய்தி; தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

85views
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் மே தினத்தன்று வாடியூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேட்டி அளித்தது தொடர்பாக விளக்கமளித்து விரிவான செய்தி குறிப்பை தென்காசி மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: தென்காசி மாவட்டம் வாடியூரில் மே தினத்தையொட்டி நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் அளிக்கப்பட்ட பேட்டி தொடர்பாக தவறான செய்திகள் வெளிவந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் 80 நகர பேருந்துகள் உள்ளன. அவற்றுள் 74 நகர பேருந்துகள் மகளிருக்கு இலவச பேருந்து சேவையாக இயக்கப்பட்டு வருகிறது. 08.05.2021 முதல் ஏப்ரல் 2023 வரை 289 இலட்சத்து 38 ஆயிரம் மகளிர்கள் பயனடைந்துள்ளார்கள். 28 வழிதடங்களில் தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்போது தென்காசியில் இருந்து வாடியூர் வரை எல்.எஸ்.எஸ் சர்வீஸ் இயக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பேருந்து சேவை கடந்த 8 ஆண்டுகளாகவே நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் கிராம சபையில் தலைவர் மற்றும் பொது மக்கள் தென்காசியில் இருந்து வாடியூருக்கு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரை (திருநெல்வேலி) தொடர்பு கொண்டு விசாரித்த நிலையில் வாடியூருக்கு சுரண்டையில் இருந்தும், சங்கரன்கோவில் இருந்தும் 8 முறை சர்வீஸ் உள்ளது. இதனால் போக்குவரத்து கழகம் நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்தை அரசாங்கம் ஈடுகட்டியுள்ளது. ஒரு நபருக்கு ரூ.16 என்ற வகையில் அரசாங்கம் போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது. கிராம சபை கூட்டத்தில் இலவச பேருந்து வசதி அந்த கிராம மக்களுக்காக வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினேன். ஆனால் இலவச பேருந்து திட்டத்தினால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று தவறுதலாக செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!