தமிழகம்

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு_நிகழ்வு

19views
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.   இந்நிகழ்வு சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்றது.  பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், கற்பக விநாயகர் கோவில் அர்ச்சகர் கணபதி ராமன், மாவட்ட அரசு காஜி முகைதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட சர்வ சமய பெருமக்கள் சமய நல்லிணக்க உரையாற்றினர்.
தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  மருத்துவர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர் அணி தேசிய துணை தலைவர் முஹம்மது அல் அமீன் நிறைவுறையாற்றினார்.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர்.

இந்த ஆம்புலன்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பெரும் முயற்சி கொண்ட தென்காசி நகர தலைவர் N.M.அபுபக்கர் MC அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருநெல்வேலி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!