தமிழகம்

பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

74views
தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் மகளிருக்கான மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் 18.04.2023 அன்று காலை 6.30 மணிக்கு இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து 5கிமீ தூரம் வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டி இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் ஆரம்பித்து வள்ளியூர் சந்திப்பு, பாரத் பள்ளி விலக்கு, பலாலி உணவகம், சிலுவை விலக்கு, மேல இலஞ்சி, மீண்டும் இராமசாமி அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளி வந்தடைய உள்ளது. மேலும் மாரத்தான் போட்டியில் அனைத்து வயது பிரிவு பெண்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசாக ரூ.750, மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் குளிர்பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!