தமிழகம்

பாளை மத்திய சிறை கைதிகளுக்கு புத்தகங்கள்; தென்காசி சமூக நல ஆர்வலர்கள் வழங்கினர்

87views
பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு தென்காசி சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காந்திய ஆர்வலர்கள் சார்பில் புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளை மத்திய சிறை வளாகத்தில் நடந்தது. இதில் தமிழ், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு நூல்கள், கலாம் பற்றிய நூல்கள், காந்திய அமுதம் என 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை மத்திய சிறைவாசிகளுக்கு சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ‌திருமாறன், காந்தியவாதி செங்கோட்டை வி. விவேகானந்தன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் விஜய் லெட்சுமி, ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி ஆகியோர் சிறைவாசிகளின் கல்வி அறிவைப் பெருக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு நூல்கள், கலாம் பற்றிய நூல்கள், காந்திய அமுதம் என 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கினர்.
பாளை சிறை வளாகத்தில் நடந்த இந்த எளிய நிகழ்ச்சிக்கு வெங்காடம்பட்டி சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் தலைமை தாங்கினார். பாளை எழில் நகர் ஓய்வு பெற்ற தாசில்தார் எஸ்.முத்துசாமி, சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், செங்கோட்டை காந்தியவாதி விவேகானந்தன், வீசெர்வ் அமைப்பு அனுப்பி வைத்த நூல்களை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் வினோத்திடம் வழங்கினார். சிறைச்சாலைக்கு நூல்கள் வழங்கியமைக்காக மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி, சென்னை தலைமை இடத்தில் டிஐஜி கனகராஜ், ஈரோடு டாக்டர் விஜி, மதுரை பாலு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். வெங்காடம்பட்டி பூ.திருமாறன், முத்துசாமி, விவேகானந்தன், விஜயலட்சுமி குழுவினர் பாளை சிறை கைதிகளுக்கு கைவினை பயிற்சிகள், இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு, சிறையில் இருந்த படியே படித்து தேர்வு எழுதி சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு பணிகளை ஏற்கனவே செய்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு சிறைகளுக்கும் நூல்கள் அனுப்பும் பணி ஒருங்கிணைப்பில் பெண் உலகம் சாந்தி, நன்னன், பிரவீன், துரை சந்தோஷ், சிவா ஈடுபட்டனர். ஆயுள் தண்டனை கைதிகளின் எதிர்கால கல்வி பாதுகாப்பு, உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உணவு, புகலிடம் குறித்து விவரம் அறிய 7373737489 என்ற எண்ணில் அழைக்கலாம் என வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லம் சார்பில் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் வினோத் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!