தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட மிகப்பெரும் அறுவை சிகிச்சை

70views
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதா மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு சிக்கல் நிறைந்த மிகப்பெரும் அறுவை சிகிச்சைகள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தலைமை மருத்துவமனையில், இரண்டு மிகப் பெரிய சிக்கலான அவரச அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளது.
தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்த 40 வயதான உலகநாதன் என்பவர் திடீர் வயிற்று வலியால் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு 19.04.23 அன்று இரவு 8 மணிக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடது பக்க குடல் இறக்கத்தால் குடல் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை அன்று இரவு 10 மணியளவில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. அது போல வாசுதேவநல்லூர் சேர்ந்த 67 வயதான சின்ன குருவம்மாள் என்பவர் வலது பக்க தொடையில் குடல் இறக்கத்தினால் குடல் அடை்பு ஏற்பட்டு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 22.04.23 அன்று இரவு 7.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்று இரவே 9.45 மணியளவில் அவரச அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.  அவருக்கு அழுகிய நிலையில் இருந்த ஓமெண்டம் அகற்றப்பட்டு குடல் அடைப்பு மற்றும் குடல் இறக்கம் சரி செய்யப்பட்டது. இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளை அறுவை சிகிச்சை மருத்துவர் விக்னேஷ் சங்கர் மற்றும் மயக்கவியல் மருத்துவர் மில்லர் அடங்கிய மருத்துவக் குழு வெற்றிகரமாக செய்தனர்.
அதேபோல் 23.04.2023 அன்று ஞாயிற்றுக் கிழமை என்ற போதிலும், நோயாளியின் நலன் கருதி கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர் திருமலை குமார் இருவரும் சேர்ந்து சிக்கலான தொடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்தனர். மயக்கவியல் நிபுணர் ராஜேஸ்வரி மற்றும் குழுவினர் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவினர். இந்த அறுவை சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கூறும் போது இந்த மூன்று நோயாளிகளுக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி அரசு மருத்துவமனையில் இது போன்ற சிக்கலான, கடினமான, அறுவை சிகிச்சைகள் தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!