தமிழகம்

சபரிமலை பெருவழிப்பாதையில் முதன்முறையாக மின்விளக்கு வசதி சபரிமலை,

142views
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நிலையில் சபரிமலை பெரு வழிபாதையின் வலியானவட்டம், சிறியான வட்டம் ஆகிய இடங்களில் முதன் முறையாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சீசனில் மின்வாரியம் பம்பை சன்னிதானம் மற்றும் பம்பையில் நான்காயிரம் மின் விளக்குகள் அமைத்துள்ளது. இதில் பெரும்பாலானவை எல்.இ.டி. விளக்குகள். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 3 எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான வசதியுடன் சார்ஜிங் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை நெருங்கியுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைக்க போலீசார் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தினமும் புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் போலீசார் பங்கேற்க வேண்டும் என்றும் எஸ்.பி. ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!