தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் தேவசேனா திருக்கல்யாணம்!!

31views
வேலூர் அடுத்த காட்பாடி தாலுக்கா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் கந்தர் சஷ்டியை முன்னிட்டு மூலவர் ஆறுமுகசுவாமிக்கு வெள்ளி கவசம் விபூதி காப்பு அலங்காரம், உற்சவர்களான வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணிசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  பின்பு வெள்ளிக்கிழமை தேவசேனா சுமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!